2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; திலீப் எம்.பி உட்பட மூவர் காயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 27 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரன்ன, வாடிகல பிரதேசத்தில் இன்று அதிகலை இடம்பெற்ற வாகன விபத்துதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சி உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் பிரதேசவாசி ஒருவரின் மீது மோதியதில் 39 வயதான அந்த பிரதேசவாசி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரைப் பார்வையிடுவதற்காக தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கிச்சென்ற திலீப் எம்.பி உட்பட மூவர் அப்பகுதியினூடாகப் பயணித்த பஸ் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், திலீப் எம்.பி, மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .