2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல வீதியில் சங்கக்குலிய ஆலயத்துக்கு முன்னால் வைத்து தனியாருக்கு சொந்தமான பஸ், பாதசாரியொருவரை மோதியதில் குறித்த பாதசாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற இவ்விபத்தில் தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான வனசிங்ஹ முதியந்செலாகே குணசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார். 

காயமடைந்தவரை தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்ததாகவும் பஸ்ஸின் சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .