2025 ஜூலை 31, வியாழக்கிழமை

TIK TOK ஆல் இளைஞன் படுகொலை

Editorial   / 2022 ஜனவரி 04 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச்  சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப், TIK TOK சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதலால், படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் நேற்று (03) சென்றுள்ளார்.

  அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு தரப்பினர், TIC TOK வீடியோ தொடர்பில் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவ்விளைஞனின் அடிவயிற்றில் குத்தியுள்ளனர்.

அதன்பின்னர், அங்கிருந்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என தெரிவித்த கிராண்ட்பாஸ் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .