Editorial / 2024 மே 27 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, வெலிகம, படவல, பத்தேகம மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது இரண்டு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் படவல பத்தேகம மாதிரி கனிஷ்ட கல்லூரிக்கு வந்த போது இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் நடுன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவைச் சேர்ந்த ஒருவரே, அவர் 20.01.2022 அன்று மிதிகம துர்க்கி கிராமத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், துப்பாக்கிச் சூடு நடந்த சாலையில் வெற்றுத் தோட்டா உறை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார், வெலிகம பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
9 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
16 minute ago