2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கிழக்கு - தெற்கு சமூக சகவாழ்வுக்கு உதவி

Princiya Dixci   / 2016 ஜனவரி 26 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையின் கிழக்கு மற்றும் தென்பகுதியில் பல்லின சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை அமுல்படுத்தி வருவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

60 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான இத்திட்டம், இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள், சகவாழ்வு, இரக்கம் ஆகியவற்றை வளர்ப்பதையும் அச்செயற்பாடுகளை தொடர்ந்து ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதரகம், இன்று செவ்வாய்க்கிழமை (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் ஆசியாவுக்கான உதவி நிர்வாகி ஜொனதன் ஸ்டவர்ஸ், இத்திட்டம் செயற்படுத்தப்படும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .