Princiya Dixci / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, நாவுல ரஜவெல - சேனாகம பிரதேசத்தில் உள்ள விகாரையின் வளாகத்தில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற நாட்டிய நிகழ்வின் போது ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர், இன்று (06) சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர், வயிற்றுப் பகுதியில் பெரும் காயத்துடன் கோனகஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நாட்டிய நிகழ்வின் போது கூடுதலான நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிய சேனாகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
நாவுல ரஜவெல - சேனாகம பிரதேசத்தில் உள்ள விகாரையை அபிவிருத்தி செய்வதற்கு நிதி சேகரிக்கும் பொருட்டு குறித்த நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது ரஜவெல - சேனாகம கிராமங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கத்திக்குத்தில் முடிந்துள்ளது.
இது தொடர்பில் நாவுல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகளையும் கைப்பற்றியிருந்தனர்.
குறித்த விகாரைக்கு நிதி சேகரிக்கும் நாட்டிய நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு நடைபெறுவதற்கு தம்மிடம் அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும் எனினும் நான்காவது நாள் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருக்கவில்லை எனவும் நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025