2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கராப்பிட்டிய வைத்தியசாலையின் ஊழியர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 நவம்பர் 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவரின் சடலத்தை, கராப்பிட்டிய வீதி, ஹிரிம்புர பிரதேசத்திலுள்ள வடிகாணிலிருந்து பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

மாத்தறை, வல்கமவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்துகொண்டு வீடு செல்ல இருந்ததாகவும் நேற்று மாலை தனது பணிகளை முடித்துகொண்டு வீடு திரும்பியதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையிலே இவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .