Princiya Dixci / 2015 நவம்பர் 03 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலயத்துக்குள் வைத்து 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பூசாரியை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்கல்ல பதில் நீதவான் ஜெ.எச்.ரஞ்சித் ஜயவர்த்தன உத்தவிட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை, பெல்லகஸ்வௌ வௌசிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனது பாட்டியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி கோவிலுக்குச் சென்ற சிறுமிக்கு விசேட பூஜையொன்று நடத்தவுள்ளதாகக் கூறிய பூசாரி, பாட்டியை திரை மறைவில் நின்று வழிபடுமாறு கூறிவிட்டு சிறுமியை கோயிலினுள் அழைத்துச் சென்றுள்ளார்.
கோயிலினுள் வைத்து தூக்க மாத்திரை கலந்த நீரைப் பருக வைத்து குறித்த சிறுமியை, பூசாரி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளமை விசாரணைகள் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025