2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஜன்னலை உடைத்த முதியவர் பலி

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டம், மீரிகம, அன்னாசித்தோட்டம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 60 வயது முதியர் ஒருவர், ஜன்னலை உடைத்தமையினால் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த வயோதிபர், வீட்டுக்கு வந்த வேளை வீட்டில் எவரும்  இல்லாமையினால் ஏற்பட்ட திடீர்க் கோபத்தில் தனது காலால் வீட்டு ஜன்னலை உதைத்துள்ளார். 

இதன்போது கண்ணாடித் துண்டொன்று காலை உடுறுத்தமையினால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. 

வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர், மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாகப் மீரிகமப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் மீரிகமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .