2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தந்தை வைத்தியசாலையில்: மகன் விபத்தில் மரணம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓபநாயக்க, ஹல்வின்ன பகுதியில் மோட்டார்சைக்கிளொன்று,   இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன், மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்காக பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தைப் பாத்து விட்டு திரும்பிய போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள ஓபநாயக்க பொலிஸார், இவ்விபத்து தொடர்பாக சி.சி.ரி.வி.யில் பதிவாகியுள்ள காட்சிக்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26 வயதுடைய இவ்விளைஞன், எதிர்வரும் ஜனவரி மாதம் திருமணம் முடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .