2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் சிக்கினார்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா-ஓயாப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கெப் வண்டியினுள் போலி ஆயிரம் ரூபாய் தாள்கள் இரண்டை வைத்திருந்த நபரை, இன்று செவ்வாய்க்கிழமை (23) கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

தியசேனபுரப் பகுதியைச் சேர்ந்த 56 வயதானவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெவ்வேறு நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட 19,422 ரூபாய் சில்லறைக் காசுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .