2025 மே 01, வியாழக்கிழமை

பாவனைக்கு உதவாத 42 வாகனங்கள் கைப்பற்றல்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாவனைக்கு உதவாத 42 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாத்தறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் அக்குரஸ்ஸை பொலிஸார் இணைந்து திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட 11 பஸ்கள், 5 வான்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், 13 லொறிகள் மற்றும் 10 முச்சக்கர வண்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் மூவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .