Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 01 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அவ்விருவரும் படுகையறையில் இருந்தபோது, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில் மதுபானத்தை பருகிவிட்டு, அவ்விளைஞனுடன் கணவன், மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார்.
தானும் அவ்விளைஞனும் படுக்கை அறைக்குச் சென்றதன் பின்னர், அங்கு கணவன் மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். கடுமையாக தாக்கியும் உள்ளார். அதன்பின்னர், படுக்கையறை காட்சிகளை தன்னுடைய அலைபேசியில் வீடியோவாக எடுத்துக்கொண்டுள்ளார் என அவரது மனைவி தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சிகளை பார்த்து தன்னுடைய கணவனும் அவ்விளைஞனும் சந்தோஷமடைந்துள்ளார். இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பெந்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இளைஞனும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெந்தோட்ட நகரில் வர்த்தக நிலையமொன்றை நடத்திச் செல்லும் 50 வயதான நபரும் 42 வயதான பெண்ணும் சட்டரீதியில் திருமணமானவர்கள் அவ்விருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவ்விருவரும் கொழும்பில் தங்கியிருந்து கல்விக்கற்கின்றனர்.
தன்னுடைய விருப்பமின்றி இவ்வாறு படுக்கை அறையை பகிர்ந்துகொண்டதாக தெரிவித்த அந்தப் பெண், அலைபேசியில் இருந்த வீடியோவை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது அதனை பிடுங்கி தரையில் அடித்து நொறுக்கிவிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, இதற்கு முன்னர் கதிர்காமத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த போதும், மற்றுமொரு இளைஞனுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளுமாறு தன்னுடைய கணவன் வற்புறுத்தியதாகவும் எனினும், அதிலிருந்து தப்பிவிட்டதாகவும் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago