Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிணற்றில் விழுந்த மனைவியை போராடி மீட்காது, மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த கணவரை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெலிகம முதுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கடந்த திங்கட்கிழமை, மதுபோதையில் வீட்டுக்கு வந்து, தனது 3 மாத குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த மனைவியுடன் சண்டையிட்டுள்ளதுடன் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் தனது குழந்தையை கட்டிலில் வைத்துவிட்டு முற்றத்துக்கு அருகிலிருந்த கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் வீழ்ந்த அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்கு அயலவர்கள் முயசித்தபோதிலும், அதனை தடுத்து, மனைவி நீரில் மூழ்கியதை குறித்த நபர் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்களில் ஒருவர், குறித்த நபரை தடுத்து கிணற்றில் வீழ்ந்த அவரது மனைவியை மீட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025