2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மலர்ச்சாலை உரிமையாளர் அமரர் ஊர்தியில் படுகொலை

Editorial   / 2024 ஜூன் 26 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மலர்ச்சாலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் தலையில் தாக்கிய இனந்தெரியாத நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமரர் ஊர்தியின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே மலர்ச்சாலை உரிமையாளர் கொல்லப்பட்டதுடன்,   (46) வயதான இவர். நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

 இறுதி சடங்கு மண்டபத்தில் பணிபுரியும் ஒருவரை அழைத்துக் கொண்டு  தெல்வத்த அவஸவத்தை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (25) இரவு சென்றுள்ளார். வழியிலேயே கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .