2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதிநவீன வாகனம்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது.

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன வாகனம் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.

எனினும், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த வாகனம் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி தெரிவித்தார்.

மேலும், அந்த வாகனம் வேறொருவரால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .