2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

14 நாள்கள் முடக்கவும்

Editorial   / 2021 ஓகஸ்ட் 28 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


உரிய பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், குறைந்தபட்சம் 14 நாள்கள் பயணக்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு காலமானது போதுமானதாக இல்லை என சங்கத்தின் தலைவர், உபுல் ரோஹன குறிப்பிட்டார். நாட்டில் தொடர்ச்சியாக அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாவதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார்.

உரியவாறு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டால், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என உபுல் ரோஹன தெரிவித்தார்.

தற்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், வீதிகளில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .