Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட 21 யோசனைகளை செயற்படுத்தினால், அர்ப்பணிப்புச் செய்யத் தயாராகுமாறு மக்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்காது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
குறித்த 21 யோசனைகள் அடங்கிய ஆவணம் கட்சியின் தலைவர் ரணில்
விக்கிரமசிங்கவால் கடந்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகத்
தெரிவித்த அவர், சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் பலப்படுத்தப்பட்ட
நாட்டை உருவாக்குவதற்கான யோசனையே அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.
கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில், நேற்று (22) கட்சி
செயற்பாட்டாளர்களுடன் இணையவழி ஊடாக இடம்பெற்ற
கலந்துந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா நெருக்கடி அதிகரித்துச் செல்லும்
நிலையில், ஏனைய கட்சிகளைப் போல் அல்லாமல் அரசாங்கத்தை விமர்சிக்கும்
அதேவேளை, எமது மாற்று வழிக் கொள்கைகளையும் முன்வைத்துள்ளோம்.
தாமதித்தேனும் 3 வாரங்களுக்கு நாட்டை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால், வீதிக்குச் சென்று பார்த்தால், பொதுமக்கள் வீதிகளில் நிற்கின்றனர்.
எம்மைப் பொறுத்தவரையில், இவ்வாறானதொரு முடக்கத்தை நாம்
கோரவில்லை. விசேட வைத்தியர்கள் கூறுவதைப் போன்ற முடக்கமே இப்போது
அவசியம் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதியின்
உரையின் சாராம்சத்தைப் பார்த்தால், எமது அரசாங்கம் அரச
பணியாளர்களுக்காக அதிகரித்த 10,000 ரூபாயை இல்லாமல் செய்வதற்கே
முயற்சிக்கின்றது என்றார்.
அத்துடன், மீண்டும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மந்த நிலையில்
இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், எனவே தடுப்பூசி செலுத்துவதை
விரைவுப்படுத்த வேண்டும் என்பதுடன், கொரோனா தொடர்பான
செயற்பாடுகளை விரிவுப்படுத்த வேண்டும் என்றார். மேலும், கொரோனா ஒழிப்புத் தொடர்பில், அந்தச் செயலணிக்கு எவ்விதச் சட்ட அதிகார ஏற்பாடுகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், அதன் முழு அதிகாரமும் சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் சுகாதார சேவை திணைக்களங்களுக்கே உள்ளதால், இந்தச் செயலணியை உடனடியாக நீக்கி, இதன் பொறுப்புகளை அமைச்சரவை ஏற்க வேண்டும் என்றார்.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்கள்
மற்றும் அதிகாரிகளுடன் கூடிய அனர்த்த முகாமைத்துவ சபையை உடனடியாக
கூட்ட வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago