2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'22ஆவது திருத்த யோசனையை தோற்கடிக்க வேண்டும்'

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்துக்கு பயணிப்பதாகும் என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், நீதிபதிகள்,  சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்புளை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கை சர்வாதிகார போக்கு என்று கூறியுள்ள அவர் இந்த யோசனை தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X