2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

Freelancer   / 2021 நவம்பர் 27 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது.

தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது.

இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .