2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அநுராதபுரம் சிறைக்கு விரைந்த மனோ கணேசன்

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர்  இன்று (18) சென்றுள்ளனர்.

எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், இவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு உடனடியாக தகவலட கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன், மண்டியிட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்தே  தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் சிறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X