Freelancer / 2021 நவம்பர் 02 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அரசாங்கம் உருவானதன் பின்னர் மிகவும் நம்பிக்கையுடன் பொது இடங்களில் சுவர் ஓவியங்களை அன்று வரைந்து தம்மை வெளிப்படுத்திய இளைஞர்கள், வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற இன்று வரிசையில் நிற்கின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தகைய இளைஞர்களை வெற்றிகொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்காலத்தில் ஒரு வரலாற்று பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக கவனமான போராட்டத்தின் பின்னரே பொதுஜன பெரமுன ஆட்சியை வென்றது என்ற அவர், ஆட்சியை நடத்துவதுடன் கட்சியும் மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றார்.
கடினமான காலங்களில் தமக்கு ஆதரவாக நின்று பொதுவான நோக்கத்திற்காக உழைத்த சிறு கூட்டாளிகளை கட்சியால் அந்நியப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
23 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
3 hours ago