2025 ஜூலை 24, வியாழக்கிழமை

அரியாலையில் நால்வர் சடலங்களாக மீட்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 27 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், இன்று பிற்பகல் (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாய் உட்பட மூன்று பிள்ளைகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் தந்தை ஒரு மாதத்துக்கு முன்னரே தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய், தனது மகள், இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய பிள்ளைகளுக்கு விசத்தை கொடுத்த அத்தாய், தானும் விசமருந்தி தற்கொலைச் செய்து கொண்டதாக அறியமுடிகிறது.

கடன் சுமை காரணமாகவே இவ்வாறு, அத்தாய் முடிவெடுத்துள்ளதாகவும் அறியகிடைகிறது. 

அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைத்தந்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .