2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று?

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார். 

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை ​மற்றைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து  வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், அவரது இரத்த மாதிரிகளை கொழும்பில் பரிசோதனைக்குட்படுத்தி அனுப்பிய பின்பே உறுதியான தீர்மானத்துக்கு வரமுடியுமென தெரிவித்துள்ள அவர், அவர் தனியார் சாரதியாக கடமையாற்றி வரும் நபரெனவும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X