Editorial / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக, நேரடியாக பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று (03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரைநிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"இலங்கை சுதந்திரம் பெற்றபோது, நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகள் இன்றி வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவே விரும்பியிருந்தோம்.
கடந்த 70 வருடகாலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.
என்றாலும், அது குறைகாணப்படாத, பூரணத்துவமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்குச் சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது. பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்" என்றார்.
12 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago