2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கடை கொரோனா கைகளில் தவழ்கிறது’

Freelancer   / 2021 ஜூன் 30 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் ஆடை அணிகலன் வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல இடங்களில் அவ்வாறான கடைகளும் வளாகங்களும் திறக்கப்பட்டு வணிகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனூடாக பாரிய கொரோனா அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன என மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

“இவ்வாறான ஆடை அணிகலன் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை முற்றாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இதுதொடர்பில் மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

தடைகளையும் மீறி திறக்கப்பட்டிருக்கும் இவ்வாறான வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய தம்மிகா ஜயலத் கொண்டு சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா  தொற்றுப் பரவுதலை கவனத்தில் கொண்டு  மேல் மாகாணத்திலுள்ள ஆடை அணிகலன் வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியன திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தடை செய்யப்பட்டு  விசேட வழிகாட்டியின் ஊடாகவும் அண்மையில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .