Freelancer / 2021 ஒக்டோபர் 30 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வகுப்புகள் ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். R
6 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago