2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’கோட்டா வழியில் செல்கிறார் ரணில்’

Editorial   / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில் பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் முட்டாள்கள்  அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷான் பெரேரா   தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07)   இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில்   வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்   செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். 
 
  அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர்  சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர்  நிதி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ அரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X