Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஒரு புறம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
பிடிக்கப் பார்க்கின்றனர். மறுபுறம் சேவை செய்த புலனாய்வு பிரிவினரைப் பிடிக்கப்
பார்க்கின்றனர். புலனாய்வு பிரிவினருக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று எவரையும் சுட
முடியாது. அவர்களால் தகவல்களை பகிர மாத்திரமே முடியும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பல கலந்துரையாடல்களில் தானும் கலந்துகொண்டதாக தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற அன்று காலையில் கூட நிலந்த ஜயவர்தன இந்தத்
தகவல்களை பொலிஸாருக்கு வழங்கினார். ஏனெனில் அவரால் தகவல்களை மாத்திரமே வழங்க முடியும் தவிர ஆயுதங்களை எடுத்துச் சென்று எவரையும் சுட முடியாது.
இத்தாக்குதலின் பிரதான தற்கொலைதாரி ,சஹ்ரானின் அலைபேசியின் மதர்போர்டை (mother
board )யார் எடுத்தது என்பது குறித்து யாராவது கதைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்.
இதனை எடுக்கும் போது பொலிஸாரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. வேறொரு நாட்டுக்கு எடுத்துச் செல்ல புலனாய்வு பிரிவுக்கு. எனவே அதைத் தான் முதலில் தேட வேண்டும்.
இத்தாக்குதலை நடத்திய நபரின் அலைபேசியில் தானே சகல விடயங்களும் இருக்கும். எனவே,
இந்த அலைபேசியின் மதர்போர்டை வேறொரு நாட்டுக்கு புலனாய்வுக்காக எடுத்துச்
செல்வார்களாயின் அதற்கு இந்த நாட்டு பொலிஸ் மற்றும் நீதிமன்றம் அனுமதி வழங்குமாயின்
அந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அந்த மதர்போர்டை எடுத்துச்
சென்றவரிடம் கதைத்து தெரிந்துக்கொள்ளலாம் என்றார்.
எனவே முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள்,உறுப்பினர்கள் மீது விரல் நீட்டுவதால் எந்த
பலனும் கிடைத்து விடப்போவதில்லை என்றார். இது தொடர்பில் யாரும் கதைக்கமாட்டார்கள். நாம் எப்போதும் கூறுவது இது மைத்திரிபால சிறிசேனவை கட்டம்கட்டும் ஒரு நடவடிக்கை என சகலருக்கும் தெரியும். அதேப்போல் அவரை அதிகாரத்திலிருந்து கீழிறக்கியம் ஒர் அரசியல் சதியாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமாகக் கொண்டு வந்ததன் பின்னரே அந்த சதி நடந்தது என்றார்.
23 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 Aug 2025