2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலை பஸ் விபத்தில் 12 பேர் காயம்

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (23) முற்பகல் 11.30 மணியளவில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவிலபதான பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் மற்றும் 09 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ நீதிமன்றில் இருந்து மஹவ சிறைச்சாலைக்கு சந்தேக  நபர்களை ஏற்றிச்சென்ற நிலையில், சிறைச்சாலை பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறுக்கு வீதியில் இருந்து பின்புறமாக பயணித்த லொறி, பிரதான வீதியில் பயணித்த சிறைச்சாலை பஸ்ஸுடன் மோதியுள்ளதுடன், பின்னர் மண்மேட்டில் மோதியில் வீதியில் குடைசாய்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியுடன் உள்ளடங்கியுள்ளார்.

காயமடைந்தவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஹவ நீதிமன்றில் நாளை (24) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X