A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான வர்த்தமான அறிவித்தல் நாளைமறுதினம் (12) நள்ளிரவில் வெளியிடலாம் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை,சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு, நாளை புதன்கிழமை 11 ஆம் திகதி கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிட (09.11.2020) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடப்படும் என்ற செய்தியை அறிவித்துள்ளாரென அறியமுடிகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மன்னாரில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வது தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது.
அதற்காக மன்னார் மாவட்டத்திலேயே ஒரு இடத்தை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .