2025 மே 14, புதன்கிழமை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; எதிர்ப்பு மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி?

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களை அடுத்த வருடம் மார்ச் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (05) தீர்மானித்துள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு விரோதமானது என்று மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் நீதிமன்றில் இன்று (05) முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, பிரதிவாதிகள் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த அனுமதி கோரியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை குறித்த மனுவில் பிரதிவாதியாக சேர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் மன்றின் அவதானத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு,  ஆறு வருடங்களில் நிறைவு செய்யும் வகையிலான 19 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X