Freelancer / 2025 ஜூலை 12 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டிற்கு ஏற்படும் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆடைத் தொழிற்துறை உட்பட இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நமது பொருளாதாரம் ஆடைகள் மற்றும் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால் கிடைக்கும் அந்நிய செலாவணியை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு பொருளாதாரத்தை வெறுமனே ஆடை ஏற்றுமதியால் மாத்திரம் இயக்க முடியும் என்று எண்ணினால் அது தவறு.
அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டால், அந்தப் பக்கத்திலிருந்தும் நாம் பாதிக்கப்படுவோம். இந்நிலையில் இந்தியாவுடன் தேவையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால், அந்தப் பக்கத்திலிருந்தும் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது. நான் கூறியது போல் செயற்பட்டிருந்தால் இந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டினார். R
15 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago