Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 19 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாத் தொற்றின் திரிபான டெல்டா தொற்று, எதிர்வரும் நாள்களில் இலங்கையில் தீவிரமாக பரவும் ஆபத்து உள்ளதென தெரிவித்த மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, உலகில் பல நாடுகளில் பல்வேறு திரிபுகள் பரவி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் உலக நாடுகள் அனைத்திலும் டெல்டா பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து இலங்கையால் தப்பிக்க முடியாதென்றார். தற்போது இலங்கையில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ராசெனிகா, பைசர், சினோஃபாம் ஆகிய தடுப்பூசிகள், டெல்டா தொற்றைக் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதென்றும் தெரிவித்த அமைச்சர், இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா தொற்றால் பாரிய
அச்சுறுத்தல் ஏற்படாது என்றார்.
மேலும், தென்அமெரிக்காவின் பெரு நாட்டை மய்யப்படுத்தி உருவாகிய லெம்டா தொற்று, பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோரினியாவை மய்யமாக்க் கொண்டு, டிப்ஸ்சைலன் என்ற தொற்றும் பல நாடுகளில் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago