2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தடுப்பூசிகளை தகர்க்கும் புதிய கொரோனா மாறுபாடு?

Freelancer   / 2021 ஒக்டோபர் 30 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபைசர் மற்றும் அஸ்ராஸெனகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பையும்  தகர்க்கக் கூடிய கொவிட் வைரஸ் வகையான A30 வைரஸ் தொடர்பில், இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மாறுபாடு பரவினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எல்லாம் முடிந்து விட்டது என மக்கள் நடந்து கொண்டால் இன்னும் நான்கு வாரங்களில் மோசமான விளைவுகள் தென்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் சுகாதார ஆலோசனைகளை மக்கள் புறக்கணித்தால், கொவிட் நோய் பரவுவது வேகமெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X