Editorial / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது நாளை (03) தீர்மானிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நாளை (03) கூட உள்ளது.
அந்தச் செயலணி, நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் இன்று (02) ஆராய்ந்துள்ளன.
நாளை (03) நடைபெறும் ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் குழுவின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த முறைகூடி இருந்த ஜனாதிபதி செயலணி, 06ஆம் திகதி வரையில் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுகாதார நிபுணர்கள் பலரும், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
பல்வேறான அழுத்தங்களுக்குப் பின்னர், ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் செப்டெம்பர் 6ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
18 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
40 minute ago