2025 மே 07, புதன்கிழமை

தனிமைப்படுத்தல் சட்டம்; மீறுவோருக்கு ஆறு மாதம் சிறை

Kamal   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் இரு தினங்களில் புதிய சுகாதார படிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட உள்ளதென தெரிவிக்கும்  சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஆளாகுவர் எனவும் தெரிவித்தார். 

இந்நாட்டின் மக்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்களை அமுல்படுத்த உள்ளதாகவும், அதன்படி சுகாதா​ர சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுருத்தலின் பேரில் தொற்றுநோய் பரவல் காணப்படும் பகுதிகளில் உரிய சட்டதிட்டங்களை பின்பற்ற தவறுவோருக்கு ஆறுமாத சிறைத் தண்டனையை வழங்கும் சட்டமொன்றும் அமுல்படுத்த உள்ளதென அவர் அறிவித்துள்ளார். 

குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள், நோய்த் தன்மையை அறிந்துகொள்ள முன்வராதவர்கள், சமூக இடைவெளியை பேணத் தவறியவர்கள் ஆகியோருக்கு எதிராகவே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்தச் சட்டங்களை மீறினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X