2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு

Editorial   / 2024 ஒக்டோபர் 15 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X