2025 ஜூலை 24, வியாழக்கிழமை

தெல்கமுவ ஓயா அவலம்; அறுவரின் சடலங்கள் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 05 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது,  நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எண்மரில் அறுவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனவெனவும் மேலும் இருவரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் தொடர்கின்றனவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நேற்று பகல் குளித்துக்கொண்டிருந்த போது, 8 பேர் நீரில் அடிச்செல்லப்பட்டனர்.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுற்றுலா மேற்கொண்டு, வெள்ளிக்கிழைமை (03) மாத்தளைக்கு  வருகை தந்துள்ளனர். இவர்களில் எண்மரே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரு சிறுமிகளின் சடலங்கள் இன்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் மேற்படி இரு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  மேலும் இருவரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் மழை காரணமாக, மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில், விசேட அதிரடிப்படை, கடற்படையின் சுழியோடி பிரிவினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகினறனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .