Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என்றார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, யாழ். மாவட்ட செயலகத்துக்கு இன்று (14) சென்றிருந்தார்.
இதன்போது, உதவி தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தார்.
பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வடக்கில் சில தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. வீதிகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது இங்கே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கு தொடர்பாக நாம் ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருகின்றோம் அது தொடர்பில் விரைவில் அந்த அறிவித்தல் வரும்.
வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளவர்கள் தேர்தல் தினத்தன்று மாலை 4 தொடக்கம் 5 மணி வரை வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.
அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள ஓட்டு போட்டது தொடர்பில் பொது இடத்தில் பேசியுள்ளமை தொடர்பில், முறைப்பாடு கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் கடமைகளில் பொலிஸார் மாத்திரமே ஈடுபடுத்தப்படுவார்கள் இராணுவத்தினர் எக்காரணத்திற்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்கு சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்து வருவதற்கு விமானப்படை மற்றும் கடற்படையினரின் உதவி தேவையாக உள்ளது.
எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்துக்கு எடுக்கும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள்” என்றார்
அத்தோடு தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார் .
-என்.ராஜ்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago