2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளை தெரியும்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து, நாளை (10) வியாழக்கிழமை அறியத்தரப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அந்த பிரேரணையை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பான தீர்மானமானது, சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே, அறியத்தரப்படும் என்று அவர் கூறினார்.  

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (08) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான விமல் வீரவன்ச, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கேள்வியெழுப்பினார். அந்த ஒழுங்கு பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே, சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னதாக ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய, விமல் வீரவன்ச, ஓன்றிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த 30இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டு வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.  

இந்நிலையில், அதை விரைந்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆகையால், அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னவென்றும் கேட்டார்.  அந்த ஒழுங்குப்பிரச்சினைக்கு பதிலளித்த சபாநாயகர் ஜயசூரிய, இந்த விடயம், தொடர்பில் சட்டப் பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டிருப்பதால் அது பற்றி சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டு, வியாழக்கிழமை மீண்டும் பேசி தீர்வொன்று காணப்படும் என்றார்.  

மீண்டும் குறுக்கிட்ட விமல் வீரவன்ச எம்.பி, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அங்கு சட்டப்பிரச்சினை எதுவும் காணப்படவில்லை என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X