Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 02 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை வருடத்தை கடந்துள்ள நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, அதனை கலைப்பதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது.
இதற்கமைய, இன்று (02) நள்ளிரவின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தாம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னர் அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஏப்ரல் 25, 27, 28, 29 அல்லது மே மாதம் 4 திகதி முதலான ஏதாவது ஒரு திகதியில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், அமைக்கப்பட்ட 8 ஆவது நாடாளுமன்றம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூடியது.
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago