Editorial / 2020 செப்டெம்பர் 26 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துக்கொண்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் மாணவர்கள் இணைந்துக்கொள்வதற்குப் பொலிஸார் தடைகளை விதிக்க முயற்சித்தப்போதிலும், அங்கிருந்த சட்டத்தரணிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம், சாவகச்சேரி சிவன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago