Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 14 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக, அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். எனவே, கட்சிகளை உடைக்காது, 2020க்குள் தீர்வைப் பெறுவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்” என, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் தமிழீழம் கோரி, எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து, அந்தப் போராட்டம் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது. போர் முடிவுற்றதாகக் கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம், பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
“யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக, எமது தலைவராக உருவாகியுள்ளார். தமிழ் மக்களின் தனித் தீர்வுக்காக, அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னும் 30 ஆண்டுகளை எதிர்பார்க்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “வடக்கு - கிழக்கு இணைப்பையே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தீர்வுத் திட்டத்தில் முன்வைத்துள்ளார். இன்று வடக்கு - கிழக்கு இணைப்பு ஏற்படக்கூடாதென்று, நாங்கள் எங்களுக்குள் அடிபடும் நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். அதற்கு இடமளிக்காது, எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தன் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து நடப்பது போன்று, சிறு சிறு கட்சிகள் விட்டுக்கொடுத்து, இவற்றின் ஊடாகத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago