Kamal / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் நோக்கில் விசேட ஏற்றுமதி பொருளாதார திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் - கடுபொத்த பொலிஸ் நிலைய திறப்பு விழா நிகழ்வில் நேற்று (30) கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர், இறக்குமதியை கட்டுப்படுத்தி வெளிநாட்டு வருவாயை தக்கவைத்துக்கொள்வதால் நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.
உலக நாடுகள் பலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அதற்கான தற்காலிக தீர்வாகவே இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உலக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகள் பலமான நிலையை அடையுமென தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி நல்லாட்சி அரசாங்கத்துக்கு உண்டெனவும் குறிப்பிட்டார்.
17 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago