2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மலையக இளைஞர் யுவதிகள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் வாழும் மலையக இளைஞர், யுவதிகள்,  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டள்ளதால் தாங்கள்  சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, இவர்களுக்கு தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அமைச்சரவை இன்று (1) அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்த விடயம் குறித்து, ஜனாதிபதி ,பிரதமர்,இரானுவ தளபதி ஆகியோர் கவனத்திற்கு கொண்டு வந்தததையடுத்து, இளைஞர்,யுவதிகளை வீடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் சுயதனிமைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X