2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களுக்கான தொண்டமானின் இறுதி யோசனைகள்

Editorial   / 2020 மே 27 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமரர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று (26)  மாலை 4.58 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  இறுதிச் சந்திப்பை முன்னெடுத்திருந்த நிலையில், இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் ஆறுமுகன் தொண்டமானால் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான யோசனையொன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரப் பிரச்சினை, பாடசாலைகள் அபிவிருத்தி, பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான யோசனையும் ஆறுமுகன் தொண்டமானால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பில் இன்று(27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X