2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலி

Editorial   / 2020 மே 21 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் ஒருவரால் இன்று பகல் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X