2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியாவில் வாள்வெட்டு: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

ரொமேஷ் மதுஷங்க   / 2017 ஒக்டோபர் 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில், இருவேறு இடங்களில் நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் மற்றும் கற்பகக் குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டாரிக்குளத்தில் உள்ள வர்த்தக நிலையத்துக்குள் நேற்றிரவு 7.45 மணியளவில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கற்பகக் குளம் பகுதியில் இரு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற மோதலில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இரு தரப்பினரும் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .