2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘வேட்பாளர்களுக்கு ஏழு வருடங்கள் அரசியல் தடைவிதிக்க வேண்டும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவோர் அரசியல்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வேட்பாளர்கள் நீதிமன்றம் மூலம் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு மேலதிகமாக 7 வருடங்களுக்கு அரசியல்தடை விதிக்க வேண்டும் என்றார்.

தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, பதுளை தேர்தல் அலுவலகத்துக்கு, இன்று  (2)  சென்றபோதே, ஹூல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இந்திக அத்துருசிங்க உள்ளிட்டவர்கள், பது​னை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாலும் இந்தப் பிரதேசத்தில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களைப் பின்பற்றி, தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X